பேருந்தில் இடம் பிடிக்க வைக்கப்பட்ட நகை பை திருட்டு
சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் இடம் பிடிக்க வைக்கப்பட்ட பையில் இருந்த 30 சவரன் நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
செய்யார் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற நகை கடை ஊழியர் சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் இடம்பிடிக்க 30 சவரன் நகைகள் இருந்த பையை வைத்துள்ளார். பேருந்தில் ஏறி பார்த்த போது பை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் நீலாங்கரையை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கைது செய்து நகைகளை மீட்டனர். அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story