தலையில் தீபம் ஏந்தி கிராம மக்களுக்கு ஆசி வழங்கிய கோயில் பூசாரி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தென்திருவண்ணாமலை என அழைக்கப்படும் அண்ணாமலையார் - உண்ணாமலையம்மன் திருக்கோவிலில், கோவில் பூசாரி தலையில் தீபம் ஏந்தி கிராம மக்களுக்கு ஆசி வழங்கினார். அண்ணாமலைப் புதூர் கிராமத்தில் உள்ள இந்த கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அருகில் உள்ள மலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவில் பூசாரி தலையில் தீபம் ஏந்தி, கிராமத்தில் வீடு வீடாக சென்று மக்களுக்கு ஆசி வழங்கினார்.
Next Story