ராமர் பாலம் தொடர்பான வழக்கு.. இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

ராமர் பாலம் தொடர்பான வழக்கு.. இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
x

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

ராமர் பாலம் தொடர்பான சுப்ரமணியன் சுவாமியின் மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம், மனுதாரர் மனு அளிக்கட்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா யோசனை தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், அப்படி என்றால் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம் எனத் தெரிவித்தனர்.

இதற்கு மனுதாரர் சுப்ரமணியன் சுவாமி, எனது கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு கூட்டம் நடத்திவிட்டது. ஏன் இதுவரை முடிவு எடுக்கவில்லை. ராமர் பாலம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக மீறி உள்ளது என வாதிட்டர்.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிடும் வகையில் மனுதாரர் சுப்ரமணியன் சுவாமிக்கு அனுமதியளித்து, அவருடைய இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.



Next Story

மேலும் செய்திகள்