கொதிக்கும் ரச அண்டாவில் விழுந்த மாணவன் துடிதுடித்து பலி..! திருமணத்தில் உணவு பரிமாறும் போது விபரீதம் - கதறி அழும் தாயார்

x

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், திருமண மண்டபத்தில் உணவு பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர், கொதிக்கும் ரசம் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், தனியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் நேரம் தவிர்த்து, பகுதி நேரமாக உணவு பரிமாறும் கேட்டரிங் வேலைக்கு சதீஷ் சென்று வந்தார். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி, மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உணவு பரிமாறச் சென்ற சதீஷ், உணவு பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது, கால் தவறி கொதிக்கும் ரசம் பாத்திரத்தில் விழுந்துள்ளார். இதில் சதீஷின் வயிறு, தொடை உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் காயம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கடும் மனவேதனைக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்