தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுத வந்த மாணவி.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஆசிரியர்கள்
- தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த மாணவியை கட்டியணைத்து ஆறுதல் கூறி ஆசிரியர்கள் தேர்வறைக்கு அனுப்பி வைத்த சம்பவம் காரைக்காலில் நிகழ்ந்துள்ளது.
- சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கு 3 மகள்கள்... கடைசி மகள் வினிதா அம்பகரத்தூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
- விஜயகுமார் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், வினிதா தந்தையை இழந்து கதறியழுதார்.
- இருந்த போதிலும் மனம் தளராத வினிதா, இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த நிலையில், கண்ணீர் வடித்த வினிதாவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஆசிரியர்கள் அவரை தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர்
Next Story