பாரதியார் சிலைக்கு மனு அளித்த வினோதம்
புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைக்க வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார். தமிழ் விருதுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற பேரணியில், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். அப்போது, பாரதியார் சிலைக்கு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவா, தமிழகத்தை போன்று புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.
Next Story