கேக்கில் வீசிய துர்நாற்றம்.. இளைஞருக்கு பிறந்தநாளில் காத்திருந்த அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள பேக்கரி கடையில், கெட்டுப்போன கேக் விற்பனை செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

ஆவலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், நண்பனின் பிறந்த நாளை ஒட்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே செயல்பட்டு வரும் ஷானு பேக்கரி கடையில், ஒரு கிலோ கேக் வாங்கியுள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கேக் வெட்டிய போது, கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், கேக்குடன் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்