நிர்வாணமாக காட்டும் கண்ணாடி.. விதவிதமா ஏமாறும் பப்ளிக்ஸ் - லாட்ஜை ரவுண்டு கட்டிய போலீஸ்...

x

மனிதர்களை நிர்வாணமாக காட்டும் கண்ணாடி எனக் கூறி சதுரங்க வேட்டை பட பாணியில் கும்பல் மோசடி செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் கிட்ட கருணைய எதிர்பார்க்க கூடாது, அவனோட ஆசைய தூண்டனும்ங்குற சதுரங்க வேட்டை பட பாணில ஒரு கும்பல் சென்னைல கைவரிசை காட்டிருக்கு...

பெங்களூருல இருந்து கிளம்பி வந்த நாலு பேரு சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல சதுரங்க வேட்டை பட பாணிலயே லாட்ஜ் எடுத்து தங்கியிருக்காங்க...

டம்மி துப்பாக்கி, வாடகைக்கு வாங்குன போலீஸ் டிரஸ், கை விலங்கு, செம்பு கலசங்கள்னு பல கைவசம் வச்சிருந்த கும்பல்... மறைமுகமாக தங்களோட கேங்க (Gang) மக்கள் மத்தில ஊடுருவ விட்டு, மனிதர்களை நிர்வாணமாக காட்டும் கண்ணாடி எங்க கிட்ட இருக்குனு விளம்பரம் செஞ்சுருக்காங்க...

இதை நம்பி போன சில காம கொடூரர்கள் அவங்க சொன்னத நம்பி அவங்க தங்கியிருக்குற லாட்ஜிக்கே போயிருக்காங்க...

அப்போ அவங்க கிட்ட ஒரு கருப்பு கண்ணாடிய கும்பல் கொடுக்க... அத வாங்கி போட்டு பார்த்து என்ன நீங்க சொன்னமாதிரி எதுவுமே தெரியலயேனு திருப்பி கொடுக்கும் போது, கை தவறுற மாதிரி கண்ணாடியை நழுவ விடுறது தான் கும்பலோட ப்ளானே...

அப்படி கண்ணாடி கீழே விழுந்து உடையும் போது, அவங்களை லாக் செய்ற கும்பல்.. கோடி ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியிருக்குறாங்க... அப்போ, நடு நடுவுல போலீஸ் டிரஸ்லயும், கைவிலங்கு, டம்மி துப்பாக்கின்னு சிலர் கெஸ்ட் (Guest) ரோல்லயும் வந்து மிரட்டிட்டு போறாங்க...

இதையே வாடிக்கையா வச்சு தொடர்ந்து கும்பல் பண மோசடில ஈடுபட்டு வந்த நிலையில, இந்த லாட்ஜில சந்தேகப்பட்ற மாதிரி சிலர் இருக்காங்கனு போலீசுக்கு புகார் பறந்துருக்கு...

டக்குனு லாட்ஜ ரவுண்டு கட்டுன போலீசார், பெங்களூரை சேர்ந்த சூர்யா, குபாய்ப், ஜித்து, இர்சாத்துன்னு 4 பேரை அரஸ்ட் பண்ணி விசாரணை நடத்திட்டு வராங்க...

அவங்க கிட்ட இருந்த டம்மி துப்பாக்கி, போலீஸ் டிரஸ்னு எல்லாத்தையும் பறிமுதல் செஞ்ச போலீசார், செம்பு கலசத்த பார்த்த உடனே, சதுரங்க வேட்டை படத்துல கோயில் கலசத்த வச்சு ஏமாத்துற மாதிரி இந்த செம்பு கலசத்துக்கு பின்னாடியும் எதாவது ஸ்டோரி இருக்கானு தீவிர விசாரணை நடத்திட்டு இருக்காங்க...

வடிவேல் வசன பாணில மோசடி கும்பல் புது, புது ப்ளானோட வராங்களோ இல்லையோ... நம்ம மக்கள் புதுசு, புதுசா ஏமாற தயரா இருக்காங்கனு இது மூலமா தெரிய வந்தது கொஞ்சம் வருத்தமே...


Next Story

மேலும் செய்திகள்