பேருந்தில் அதிக சத்தத்துடன் ஒலித்த பாடல்...குறைக்க சொன்னது யாருனு தெரியாம அடாவடி.தெரிஞ்சதும் தலைகீழாக மாறிய சீன்
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி செம்மல் சொந்த வேலையாக காஞ்சிபுரத்திற்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் அதிக ஒலியுடன் சினிமா பாடல்கள் ஒலிக்கச் செய்யப்பட்ட நிலையில், சத்தத்தைக் குறைக்கச் சொல்லி நீதிபதி நடத்துநருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அறிவுரை சொன்னது நீதிபதி என அறியாமல் நடத்துநர் கண்டுகொள்ளாமல் இருக்கவே, மீண்டும் சத்தத்தைக் குறைக்க அறிவுறுத்தினார் நீதிபதி. ஆனால் ஓட்டுநரும் நடத்துநரும் அதை அலட்சியப்படுத்தவே, தனது நிறுத்தத்தில் இறங்கிய நீதிபதி செம்மல் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு புகார் தெரிவித்தார். இதன்பேரில், போக்குவரத்து காவலர்கள் உடனடியாக பேருந்தை நிறுத்து விசாரணை மேற்கொண்டு ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் எச்சரிக்கை விடுத்து, பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பேருந்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.