அப்பா, அம்மாவை கொன்று விட்டு வீட்டிற்குள் பதுங்கி இருந்த மகன் - கும்பகோணத்தில் அதிர்ச்சி

x

பெற்றோரை மகனே கொன்ற கொடூர சம்பவம் கும்பகோணத்தில் அரங்கேறியுள்ளது. கும்பகோணம் அருகே தில்லையம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - லட்சுமி தம்பதி. இவர்களுடன் 54 வயதுடைய மகன் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாய்- தந்தையரை கொலை செய்து, வீட்டிற்குள்ளே, இருந்து வந்தது தெரிய வந்தது. கோவிந்தராஜ் வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். வயதான தம்பதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களது உடலை கைப்பற்றினர். பின்னர் ராஜேந்திரனை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து ராஜேந்திரனை அடுத்த மாதம்12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து திருச்சி சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்