அரிவாளால் வெட்ட வந்த மகன்... சுதாரித்த தந்தை செய்த காரியம்

x

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மது அருந்தி விட்டு தகராறு செய்து வந்த மகனை தந்தையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டியை அடுத்த காட்டுராமன்பட்டியை சேர்ந்த முத்துராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு 3 மகள்களும், மகன்களும் உள்ளனர். இளைய மகன் முத்துக்குமார் வேலைக்குச் செல்லாமல், மது அருந்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு, மது அருந்த பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்தபோது, அவர் பணம் தர மறுத்ததால், வரை முத்துக்குமார் அரிவாளால் வெட்ட முயன்றார்.

அப்போது சுதாரித்துக் கொண்ட முத்துராஜ், மகனை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்