பிரபல ஷோரூம் ஷட்டர் மீது பாயந்த மின்சாரம் - கடையைத் திறக்க முயன்ற காவலாளி உயிரிழப்பு

x

சென்னை குரோம்பேட்டையில் மின்சாரம் தாக்கி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி உயிரிழந்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண மோகன்குமார், குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஷோரூமில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். காலையில் ஷோரூமை திறக்க வந்த அவர், ஷட்டர் மீது கைவைத்தபோது மின்சாரம் தாக்கியதால், மாடியில் ஏறி மின்சாதனங்களை சரிசெய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில், மாடியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சார கேபிள்கள் மழை நீரில் மூழ்கியபடி உள்ளன. இதன்காரணமாக, அந்த ஷோரூமில் உள்ள அனைத்து மின்சாதனங்களில் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த மின்வாரியத் துறையினர், மின் இணைப்பை துண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்