மீட்டிங்கில் விஜய் சொன்ன ரகசியம்? "வெங்கட்பிரபு" படம் தான் கடைசி படமா? - திரைமறைவில் பேசியதை போட்டு உடைத்த பெண்

x

விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

விஜய் மக்கள் இயக்கம் வாயிலாக மக்கள் நலப்பணிகளை செய்து வரும் விஜய், அரசியலை நோக்கி செல்வது அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக களம், அம்பேத்கர் சிலைக்கு மாலை... ஏழை மக்களுக்கு உணவு என இயக்க பணிகள் தொடர, 234 தொகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி கவனம் ஈர்த்தார் விஜய்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய அந்ததந்த தொகுதி பொறுப்பாளர்களை பனையூர் அலுவலகத்தில் நேரில் அழைத்து பாராட்டினார் நடிகர் விஜய்... நிகழ்ச்சிக்காக புதிய கெட்டப்பில் அலுவலகத்திற்கு விஜய் வரவும், இயக்க பொறுப்பாளர்கள் தளபதி, தளபதி என கோஷம் எழுப்பினர்.

அனைவரையும் பார்த்து வணக்கம் தெரிவித்து அலுவலகத்திற்குள் சென்ற விஜய், சேலம், கிருஷ்ணகிரி, ஒசூர், விருதுநகர், அரியலூர், திருச்சி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், சிவகங்கை, நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் என அனைவரையும் மாவட்ட வாரியாக அழைத்து மன்ற செயல்பாடு குறித்து ஆலோசித்ததுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

நிர்வாகிகளுடன் இரண்டு மணிநேர ஆலோசனையை மேற்கொண்டார் விஜய்...

பொறுப்பாளர்களிடம் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், எல்லோரும் ஒற்றுமையாக இருந்து விஜய் கரங்களை பலப்படுத்த வேண்டும் எனவும் இயக்கத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது எனவும் அறிவுரை வழங்கியிருக்கிறார்....

கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்ட விஜய், மாற்றுத்திறனாளி நிர்வாகி ஒருவரை சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த 500-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களுக்கு கதம்ப சாம்பார், ரசம், கூட்டு - பொரியல் உடன் சைவ சுடச் சுட பரிமாறப்பட்டது...

விஜயை சந்தித்த பொறுப்பாளர்கள் பேசுகையில் அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை, வழக்கமான சந்திப்பே என கூறிச் சென்றார்கள்

இருப்பினும் மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பு என விஜய் நகர்வுகளை கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள், 234 என்ற எண்ணிக்கையில் விஜய் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் அரசியலுக்கு அச்சாரமிடுகிறார் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்