அங்கிருந்து வந்த சீக்ரெட்.. பக்கா ஸ்கெட்ச்; போலியாக ஒரு டிராபிக்.. சிக்கிய கும்பல்
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, ஆள் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு,கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து பெங்களுரூக்கு தப்பிச்செல்லும் ஆள் கடத்தல் குற்றவாளிகள், கரூர் வழியாக செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆட்டையம்பரப்பு அருகில் நெடுஞ்சாலையில் டிராபிக்கை ஏற்படுத்திய கரூர் காவல்துறையினர், ஆள் கடத்தல் குற்றவாளிகள் 5 பேரையும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவற்றையும் கையும் களவுமாக பிடித்து தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடத்தல் குற்றவாளிகளை பிடித்த காவலர்களை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்தார்
Next Story