அன்பென்றாலே அம்மா…தாய் போல் ஆகிடுமா…இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு பராமரிக்கும் காட்சி - பார்ப்பவர்களின் மனதை கரைய வைக்கும் காட்சி
சேலத்தில் குட்டிகுரங்கு இறந்ததை ஏற்றுக்கொள்ளாமல், உயிருடன் இருப்பது போன்று தாய்க் குரங்கு பராமரிக்கும் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க செய்துள்ளது.......
இறந்த குட்டி குரங்கை தூக்கிக்கொண்டு பாசத்துடன் அரவணைத்து வரும் தாய்க் குரங்கின் பாச போராட்டம்......
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சேலம் ஏற்காட்டில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டெருமை, மான் , கேளை ஆடு, காட்டு பன்றி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது ஏராளமான குரங்குகள் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் அங்குள்ள பள்ளிகள் இருக்கும் பகுதியில் சுற்றி வருகின்றது. குறிப்பாக ஏராளமான தாய்குரங்குகள் குட்டி குரங்குகளை மடியில் அரவணைத்தவாறு பாசத்துடன் வைத்துக்கொண்டு உணவு கொடுத்து பராமரிக்கும் காட்சிகள் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகளால் காண முடியும்.
இந்த நிலையில் சேலம் ஏற்காடு அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக இறந்து நிலையில் உள்ள குட்டியுடன் தாய் குரங்கு சுற்றி வருவது அங்கு இருப்பவர்களை மிகவும் கவலையடைய செய்து உள்ளது. அழுகிய ஈக்கள் மொய்க்கும் நிலையில் இருக்கும் குட்டி குரங்கு உயிருடன் இருப்பதாக எண்ணிக் கொண்டு பாசத்துடன் குட்டி குரங்கை பராமரிக்கும் தாய் குரங்கின் பாசம் பார்ப்பவர்களை வேதனையடைய செய்துள்ளது. குறிப்பாக குட்டிக்கு உயிர் கொடுக்கும் எண்ணத்துடன் வாய்வைத்து உதுவதும். மேலும் அதன் மீது காது வைத்து பார்ப்பதும் பிறகு தூக்கி கொண்டு ஓடுவதுமாக இருந்து வருகிறது. மேலும் மனிதர்கள் அருகே சென்றால் இறந்த குட்டி குரங்கின் உடலை தூக்கிக்கொண்டு மரத்திற்கு மேல் ஏறி ஓடிவிடுகிறது. விலங்குகளின் தாய் பாசம் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.