சினிமா பட பாணியில்... சொகுசு காரில் சுற்றிய ரவுடிகள்... சேஸிங் செய்து பிடித்த போலீசார்

x

சென்னை கொடுங்கையூர் குப்பை மேடு பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சொகுசு கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டா கத்திகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரில் இருந்து தப்பியோடிய 2 பேரை, போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். கைதான நபரில், வெள்ளை பிரகாஷ் என்பவர் பிரபல ரவுடி என்பதும், அவர் மீது 119 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மற்றொரு நபர் விக்கிரமாதித்தன் என்பதும் தெரியவந்தது. இந்த இருவரும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு, ஆயுதங்களுடன் காரில் சென்றது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், கூட்டாளிகளான பிரதீப், பிரசாந்த், அருண் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்