காங்கேயத்தை கதற விட்ட ரவுடி கைது!!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடையை சென்னையைச் சேர்ந்த ரவுடி ஜனாவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
காங்கேயம் அருகே உள்ள சாய்ராம் நகரில், சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் சொகுசு வீடு கட்டி வருவதாக காங்கேயம் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல் வெளியானது.
விசாரணையில் அந்த நபர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தன் என்பது தெரியவந்தது. அவர் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 15-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் என 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்தபோது தலைமறைவான ஜனா, காங்கேயம் பகுதியில் சொகுசு வீடு கட்டி குடியேற முடிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவுடி ஜனாவை, சென்னை போலீசாரிடம் காங்கேயம் போலீசார் ஒப்படைத்தனர்.