விடுமுறைக்கு வீடு திரும்பிய ரவுடி..செதில் செதிலாக வெட்டிக்கொலை.. பழனியில் அரங்கேறிய பயங்கரம்

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி, குறும்பபட்டியை சேர்ந்த ரவுடி பழனிவேல் என்பவர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர், விடுமுறையையொட்டி சொந்த ஊர் திரும்பிய நிலையில், மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், குரும்பபட்டியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அழகாபுரியை சேர்ந்த ஆகாஷ் ஆகிய இருவரை கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்