மதுரை எய்ம்ஸ்.மக்களவையில் திமுக எம்.பி.கேட்ட கேள்வி உடனே மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சரிடம் இருந்து வந்த பதில் கடிதம்

x

ஜப்பானுடனான கடன் ஒப்பந்தப்படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை செயல்படுத்துவதற்கு 2026ஆம் ஆண்டு வரை அவகாசம் உள்ளதாக, திமுக எம்பிக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருவது குறித்து தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவின் பவார் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியில், எல்லைச்சுவர் கட்டுவது உள்ளிட்ட, முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை மூலம் கூடுதல் பட்ஜெட் வள நிதிஉதவியின் கீழ் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதில் இருந்து அதிக காலம் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடன் ஒப்பந்தத்தின்படி, திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலம் 5 ஆண்டு 8 மாதங்கள் என்றும் 2026-ம் ஆண்டுவரை 2026 அக்டோபர் வரை அவகாசம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்