பொதுமக்களை அச்சுறுத்தி வந்த PT-7 காட்டு யானை... மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட டோனி வட்டார பகுதிகளில் பிடி-7 எனப்படும் காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்நிலையில், அந்த யானையை முண்டூர் பகுதிக்கும், டோனி பகுதிக்கும் இடையே மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
கடந்த சில நாட்களாக, 75 பேர் கொண்ட குழு இந்த யானையை தேடி வந்த நிலையில், வனத்துறையினரிடம் சிக்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த யானையை கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சி அளிக்க ஏற்கனவே வனத்துறை திட்டமிட்டு இருந்தது
இதற்கிடையே இந்த யானைக்கு, வனத்துறை அமைச்சர் சசேந்திரன் டோனி என புதிய பெயர் சூட்டினார்.
Next Story