சக்கரத்தில் நட்டுகள் இல்லாமல் இயங்கிய PRTC பேருந்து... அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய மக்கள்

x

சக்கரத்தில் நட்டுகள் இல்லாமல் பிஆர்டிசி பேருந்து இயக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் காரைக்காலில் நிகழ்ந்துள்ளது. காரைக்காலில் இருந்து அம்பகரத்தூர் சென்ற பிஆர்டிசி பேருந்து திடீரென ஒரு பக்கமாக இழுப்பதைப் போல் உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி சக்கரத்தை சோதனையிட்டார். அப்போது முன்பக்கம் இருந்த வலப்புற சக்கரம் ஒரு நட்டு கூட இல்லாமல் இயங்கியது கண்டறியப்பட்டது. போக்குவரத்து கழக ஊழியர்கள் சக்கரத்தைக் கழற்றி மாட்டியபோது கவனக்குறைவாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு தலையிட்டு கவனக்குறைவாக இருந்த ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்