விண்ணைத்தொட்ட காய்கறி விலை....ஒரு கிலோ தக்காளி இவ்ளோ ரூபாயா...
கோடை வெயில், கோடை மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி உற்பத்தி சரிந்து, அதன் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி தரத்திற்கு ஏற்றப்படி 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மொத்த விலையில் ஒரு கிலோ பட்டாணி 180 ரூபாய்க்கும், பீன்ஸ் 120 ரூபாய்க்கும், பூண்டு 160 ரூபாய்க்கும், இஞ்சி 120ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சின்ன வெங்காயம் 80 ரூபாய், பச்சை மிளகாய் 60 ரூபாய்,
எலுமிச்சை ஒரு கிலோ 80 ரூபாய், வண்ண குடமிளகாய் 200 ரூபாய், அவரைக்காய் 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கேரட், பீட்ரூட், வெண்டைக்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள் கிலோ ஒன்று 45 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
() தக்காளி உள்ளிட்ட காய்களின் விலை பட்டியல்
தக்காளி (1கி) - ரூ80- ரூ.100
பட்டாணி (1கி)-ரூ.180
பீன்ஸ் (1கி)- ரூ.120
பூண்டு (1கி)- ரூ.160
இஞ்சி (1கி)- ரூ.120
சின்ன வெங்காயம் (1கி)- ரூ.80
பச்சை மிளகாய் (1கி)- ரூ.60
எலுமிச்சை (1கி)- ரூ.80
வண்ண குடமிளகாய் (1கி)- ரூ.200
அவரைக்காய் (1கி) - ரூ.70
கேரட் (1கி)- ரூ.70
பீட்ரூட் (1கி)- ரூ.60
வெண்டைக்காய் (1கி)- ரூ.50
கத்தரிக்காய் (1கி) - ரூ.50