ஒரேநாளில் தாறுமாறாக எகிறிய காய்கறி விலை..! - "கேட்டாலே தலை சுத்துதே" - பொதுமக்கள் கண்ணீர்
கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 60 ரூபாய் உயர்ந்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ தக்காளி தொடர்ந்து 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ இஞ்சி 260 ரூபாய்க்கும், பட்டாணி 200 ரூபாய்க்கும், பூண்டு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பீன்ஸ் 80 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், வாழைத்தண்டு 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காய் தலா 35 ரூபாய்க்கும், முள்ளங்கி 30 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு கிலோ பாகற்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் 30 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 ரூபாய்க்கும், காலிஃபிளவர் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story