குறையும் தக்காளி விலை?...மத்திய அரசு சொன்ன தகவல் | Tomato Price | Central Government

x

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்படுவதாகவும், இவை இந்தியாவின் ஒட்டுமொத்த தக்காளி உற்பத்தியில் 58% பங்கு வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தக்காளி உற்பத்தி மற்றும் அறுவடை செய்யப்படும் சுழற்சி வெவ்வேறாக இருப்பதாலும், விநியோக சங்கிலி ஏற்பட்டுள்ள தற்காலிக இடையூறு மற்றும் மோசமான வானிலை காரணமாக, தக்காளியின் விலை திடீரென உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. நாசிக் மாவட்டத்திலிருந்து விரைவில் புதிய வகை தக்காளி சந்தைக்கு வர இருப்பது, அவுரங்காபாத் மற்றும் நாராயணகோன் பகுதியில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் கூடுதலாக தக்காளி விநியோகம் சந்தைக்கு வர இருப்பது மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்திலிருந்தும் விரைவில் தக்காளி வர இருப்பதால் வரும் காலங்களில் தக்காளியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்