தங்கம் விலை திடீர் குறைவு..! - காரணம் என்ன?
தங்கம் விலை திடீர் குறைவு..! - காரணம் என்ன?
தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு கடந்த இரண்டு வாரங்களில் ஆயிரத்து 192 ரூபாய் சரிந்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் மற்று டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், தங்கத்தில் இருந்து கடன் பத்திரங்களுக்கு முதலீடுகள் மாறி வருகின்றன.இதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.அக்டோபர் 9இல், தங்கம் விலை சவரனுக்கு 38 ஆயிரத்து 720 ரூபாயாக இருந்து, அக்டோபர் 11இல் 37 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்தது.அக்டோபர் 15இல் 37 ஆயிரத்து 520 ரூபாயாக சரிந்து, இன்று 37 ஆயிரத்து 528 ருபாயாக சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு விகிதம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதால், வட்டி விகிதத்தை அமெரிக்க ரிசர்வ் வங்கி 4 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக டாலர் மதிப்பு மேலும் அதிகரித்து, தங்கம் விலை சரிய வாய்ப்புள்ளதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றன.