பாலியல் புகாரில் சிக்கிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் - காங்கிரஸ் கட்சியினர் உருவபொம்மை எரிப்பு போராட்டம்...
பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனை கண்டித்து அரியானாவில் காங்கிரஸ் கட்சியினர் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அரியானாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கண்டித்து, உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story