"ஒரு பிள்ளை கருவில் கொண்டு ஒரு பிள்ளை கையில்.." குழந்தையுடன் மூச்சு வாங்க நடந்து வந்த கர்ப்பிணி..ஓடி போய் பெண் SI செய்த நநெகிழ்ச்சி செயல்

x

நெல்லையில், சுட்டெரிக்கும் வெயிலில் மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடிச்சென்று உதவிய பெண் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், கைக்குழந்தையுடன் கடும் சிரமத்துடன் நடந்து வந்த அந்த பெண்ணுக்கு, உதவி ஆய்வாளர் சுவாதிகா ஓடிச் சென்று உதவியதுடன், அந்த குழந்தையையும் பாசத்துடன் தூக்கி நடந்து வந்தார். பெண் காவல் உதவி ஆய்வாளரின் இந்த மனிதாபிமான செயலை, பலரும் பாராட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்