காற்று வேகத்தால் மூழ்கிய விசைப்படகு..! நடு கடலில் தத்தளித்த மீனவர்கள் - மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விசைப்படகு கடலில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.
வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த பாஸ்கருக்கு சொந்தமான விசை படகில் நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு கடலில் மூழ்கியது.
இதனையடுத்து படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர். இதனை கண்ட சக மீனவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக கரை சேர்த்தனர்.
Next Story