மாசடைந்து போன கொடைக்கானல் ஏரி..சுத்தப்படுத்த அதிகாரி எடுத்த அதிரடி ஆக்க்ஷன்...

x

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமாகவும், பழனி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள நட்சத்திர ஏரி, மாசடைந்து காணப்பட்டது. இதனையடுத்து ஜப்பானில் இருந்து பயோ பிளாக் கற்கள் வரவழைக்கப்பட்டு, ஏரி நீரை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏரியில் உள்ள நீரில் ஆக்‌ஸிஜனை புகுத்தி அதனை நன்னீராக மாற்றவும், ஏரி நீர் துற்நாற்ற‌ம் அடிக்காம‌ல் இருக்க‌வும், ஏரியின் 4 இடங்களில் நவீன ஆக்ஸிஜன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அக்கருவி மூலன் ஏரி நீர் நன்னீராக மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர், ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி, 900 எல்.ஈடி விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் நட்சத்திர ஏரியில் விரைவில் புதிய படகு குழாம் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்