பயணியை லத்தியால் தாக்கிய காவலர் - எஸ்.பி. அதிரடி உத்தரவு
பயணியை லத்தியால் தாக்கிய காவலர் - எஸ்.பி. அதிரடி உத்தரவு
நாகையில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியை மதுபோதையில் லத்தியால் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் காவல் நிலைய காவலர் கோடீஸ்வரன் பயணி ஒருவரை லத்தியால் தாக்கியுள்ளார். இது தொடர்பான விசாரணையில் காவலர் கோடீஸ்வரன் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கோடீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து நாகை எஸ்.பி ஹர்ஷ் சிங் உத்தரவிட்டுள்ளார்.
Next Story