ரவுடிகளுக்கு ரூட் போட்டு கொடுத்த போலீஸ், வக்கீல்.. சிக்கிய ஆடியோக்கள்

x

கோவையில், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, காவலர் மற்றும் வழக்கறிஞரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெங்களூருவில் கைதான கோவையை சேர்ந்த ரவுடிகள், சுஜி மோகன், அஸ்வின் ஆகியோரிடம், கஞ்சா கடத்தல் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் ஸ்ரீதர் மற்றும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஆஷிக் ஆகிய இருவரும், கஞ்சா கடத்தலில் தங்களு​க்கு உதவியதாக தெரிவித்தனர். காவல்துறையினர் சோதனை உள்ள இடங்கள் குறித்தும், மாற்று வழியில் செல்வது குறித்தும் இவர்கள் இருவரும் ஆலோசனை வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், காவலர் ஸ்ரீதர் மற்றும் வழக்கறிஞர் ஆஷிக்கும், ரவுடிகள் சுஜிமோகன் மற்றும் அஸ்வினிடம் பேசிய செல்போன் ஆடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடரந்து காவலர் ஸ்ரீதர் மற்றும் வழக்கறிஞர் ஆஷிக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்