முக்கிய பாஜக நிர்வாகியை இருட்டில் நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீசார்? - பின்னணியில் அவரா?

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் பாஜக மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவராக உள்ளார். இவரது தம்பி செந்தில்குமார், லோனில் வாங்கிய தனது டிராக்டரை அஜித் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். டிராக்டருக்கு முறையாக லோன் கட்டவில்லை என கூறி, டிராக்டர் ஷோரூம் உரிமையாளர் வைரமுத்து என்பவர், திருப்பத்தூர் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் சிவா மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்து சென்று பணத்தை கட்ட சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பாமக மாவட்ட செயலாளர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர், வினோத்குமார் மற்றும் செந்தில்குமாரை கைது செய்ய கோரிக்கை வைத்தனர். அதன்படி, வினோத்குமாரை கைது செய்த ஆலங்காயம் போலீசார், விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி, மின்சாரத்தை துண்டித்து லத்தியால் சராமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வினோத்குமார், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்