கட்சிக் கூட்டத்திற்கு சென்ற விமானம்..திடீரென விபத்தில் சிக்கிய அதிர்ச்சி..பலியான அரசியல்வாதிகள்
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்திற்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
San Luis de Gaceno என்ற இடத்தில் இந்த விமானம் விபத்திற்குள்ளானது. இதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் விமானி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த அரசியல்வாதிகள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோ கட்சியைச் சேர்ந்தவர்கள்... அவர்கள் இறப்பிற்கு அக்கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது... விமானமானது வில்லவிசென்சிவ்வில் இருந்து Bogota-ற்கு கட்சிக் கூட்டத்திற்காக பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story