திடீரென ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம்..! அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய 175 பயணிகள்

x

திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானம், ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து 175 பயணிகளோடு, டெல்லிக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்த விமானி, விமானத்தை அவசரமாக ஓடுபாதையில் தரையிறக்கினார். இதனையடுத்து பொறியாளர்கள் குழு தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். இதனையடுத்து அந்த விமானம், 3 மணி நேரம் தாமதமாக டெல்லி புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்