ப்ளான் போட்டது 20 ஆயிரம் கோடிக்கு.. ஆனா கிடைச்சதோ - குமுறும் அதானி குழுமம்..

x

அதானி என்டெர்பிரைசஸ் நிறுவனம், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதனத்தை திரட்ட, எஃப்.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிடும் திட்டத்தை வெள்ளியன்று தொடங்கியது. ஆனால் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் விளைவாக அதானி நிறுவனங்களில் பங்குகள் 20 சதவீதம் சரிந்துள்ளதால்,

நேற்று 150 கோடி ரூபாய் அளவுக்கு மட்டும் புதிய பங்குகள் விற்பனையாகியுள்ளது. எஃப்.பி.ஓ முறையில் அதானி என்டெர்பிரைசஸ் பங்கு 3 ஆயிரத்து 112 ரூபாய்க்கு

விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பங்கு சந்தையில், இதன் விலை தற்போது 2 ஆயிரத்து 796 ரூபாயாக சரிந்துள்ளதால், இத்திட்டம் வெற்றியடைவது கேள்விக்குறியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்