திருமண நாளில் காதல் மனைவிக்கு கணவன் கொடுத்த விபரீத பரிசு
அக்பர் காலனி தெருவை சேர்ந்த அருள்- ரேவதி தம்பதி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் கடந்த ஓராண்டு காலமாக ரேவதி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, பணிக்கு சென்று திரும்பிய ரேவதியை வழிமறித்த கணவன், தன்னுடன் இணைந்து வாழ அழைத்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ரேவதி, தன்னுடைய உடைமைகளை எடுத்து வர கணவருடன் சென்றுள்ளார்.
அப்போது, ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில், ரேவதியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கணவன் அருளை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story