பணிக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம்.. ஆலை நிர்வாகம் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார்

x

கரூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில், வேலைக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம் அடைந்த சம்பவத்தில், ஆலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புகழூரில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில், கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த சுதன் என்பவர், இரவு பணிக்கு சென்றபோது, நெஞ்சுவலி என ஆலையில் உள்ள முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், வாய்வு தொல்லையாக இருக்கும் எனக் கூறி, சாதாரண மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. எனினும் சுதனுக்கு தொடர்ந்து நெஞ்சுவலி இருந்த காரணத்தால், மயங்கி விழுந்துள்ளார். அவசரமாக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சுதனுக்கு மனைவி மற்றும் 6 வயது குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்