'இன்னொரு சாத்தான்குளம் சம்பவம்'... "விசாரணைக்கு சென்றவர் அடித்துக்கொலை..?" கான்பூரில் அதிர்ச்சி

x

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலையை போன்று நகைக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரை சேர்ந்த நகைக்கடைக்கார பல்வாந்த் சிங் மீது மற்றொரு நகைக்கடைக்கார் திருட்டு புகாரை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து பல்வாந்த் சிங்கை போலீசார் கொடூரமாக தாக்கியதாக என உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் 22 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். பாஜக எம்.பி. தேவேந்திர சிங்கும் போராட்டம் நடத்த இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்த நிலையில், 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வாந்த் சிங் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்