ஓட்டு போட்ட சீட்டை கையோடு எடுத்து சென்ற நபர்.. வடிவேலு நகைச்சுவை போல் நடந்த நிகழ்வு | pudukkottai
புதுக்கோட்டையில் வடிவேலு நகைச்சுவை பாணியில் வாக்குச்சீட்டை ஒருவர் தம்முடனே எடுத்து சென்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் நீரை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் வாண்டாக்கோட்டை பகுதியில் தலைவர் பதவிக்கு 4 நபர்கள் போட்டியிட்டனர். லாரி சின்னத்தில் போட்டியிட்ட கருப்பையா 135 வாக்குகளும், ஏணி சின்னத்தில் போட்டியிட்ட நாராயணசாமி 134 வாக்குகளும், மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுப்பிரமணியன் 131 வாக்குகளும், மின்விளக்குச் சின்னத்தில் போட்டியிட்ட நல்லக்குமார் 13 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் வித்தியாசம் என, அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு ஓட்டுச் சீட்டு காணமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்று முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பிறகும் அதே எண்ணிக்கை மீண்டும் மீண்டும் வந்ததால் லாரி சின்னத்தில் போட்டியிட்ட நபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.