"டேய் டேய் நானும் உள்ளே வரேன்.." ஜோடியாக வீட்டை சுத்துப்போட்ட கரடிகள்.. வீட்டின் கேட் மேல் ஏறி செல்லும் காட்சி

x

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிகளில் இரண்டு கரடிகள் உலா வந்துள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது. இந்த நிலையில் அரவேணு பெரியார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பிற்குள் இன்று அதிகாலை 2 கரடிகள் உலா வந்துள்ளது.

வீட்டை முழுவதுமாக சுற்றிய இரண்டு கரடிகள் சாப்பிட எதுவும் கிடைக்காததால் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.


Next Story

மேலும் செய்திகள்