ஹோட்டலில் சம்பளம் தராத ஓனர்.. நண்பர்களுடன் வந்து ஊழியர் செய்த சம்பவம்
ஜலந்தரில் உள்ள தனியார் உணவகத்தின் உரிமையாளருக்கும், உணவகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் சம்பளம் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் சம்பளம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஊழியர், தனது நண்பர்கள் 4 5 பேரை அழைத்து வந்து, உணவகத்துக்குள் நுழைந்து, உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களையும் அந்த கும்பல் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்
Next Story