ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுத்த நகைக்கடை ஓனர்..!
திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்களை சித்தூரை சேர்ந்த நகைகடை உரிமையாளர் காணிக்கையாக வழங்கியுள்ளார். சித்தூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் நாராயணமூர்த்தி - ஸ்வர்ண கௌரி தம்பதியினர் திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கோடி மதிப்பிலான மூன்று வகையான தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினர். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி மற்றும் முதன்மை செயல் அலுவலர் அணில் குமார் முன்னிலையில் காணிக்கை வழங்கப்பட்டது.
Next Story