சாலையோரம் யாசகம் பெற்று வாழ்ந்து... வந்த மூதாட்டி மரணம்.. மூதாட்டியின் - சுருக்குப்பையை கண்டு கண்கலங்கிய போலீசார்

x
  • சேலத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த மூதாட்டி, தனது சுருக்குப் பையில் 27 ஆயிரம் ரூபாய் சேமித்து வந்திருந்த‌து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சேலம் அண்ணாநகரில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர், யாசகம் பெற்றும், பழைய அட்டைப் பெட்டிகளை சேகரித்து, விற்பனை செய்து சாலையோரம் வசித்து வந்துள்ளார்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்த‌து தெரியவந்த‌து.
  • இதையடுத்து, போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மூதாட்டி வைத்திருந்த சுருக்கு பையில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
  • ரூபாய் நோட்டுகளை கணக்கிட்டு பார்த்தபோது அதில், 27 ஆயிரத்து 200 ரூபாய் பணம் இருந்ததை கண்டு போலீசாரும் பொதுமக்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.
  • இதையடுத்து, அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மூதாட்டி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் செல்லகுழந்தை என்பதும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்