அடுத்து அச்சுறுத்தும் கொடிய வைரஸ் - 'ஹை அலர்ட்' விடுத்த அரசு

x

கர்நாடகாவில் முதல் முறையாக, ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 'ஜிகா வைரஸ்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15 நாட்களாக, காய்ச்சல், வாந்தி, பேதியால் அவதிப்பட்டு வந்தார். விஜயநகராவின் விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் ரத்த மாதிரி சேகரித்து புனே ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமியை தனிமைப்படுத்தி, சிறப்பு மருத்துவர்கள் குழு தனியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சிறுமிக்கு பயண பின்னணி எதுவும் இல்லாத சூழலில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் ராய்ச்சூர், விஜயநகரா உட்பட சுற்று வட்டார மாவட்டங்களில் 'ஹை அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதி கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.


Next Story

மேலும் செய்திகள்