அடுத்த அதிர்ச்சி ஆந்திராவில்.. திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்..

x

ஆந்திர மாநிலம் ஏலூர் ரயில் நிலையம் அருகே, இருப்பு பாதையை சரி செய்ய பயன்படுத்தும் மராமத்து ரயிலில், தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து காரணமாக, ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மராமத்து ரயிலில், பெருமளவில் டீசல் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்