உலகம் சந்தித்த இயற்கை சீற்றங்கள்...பருவநிலை மாற்றத்தால் ஆட்டம் கண்ட உலகம்

x

2022ல் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவால் சந்தித்திருந்தது, பாகிஸ்தான். ஜூன் மாதம் தொடங்கிய இடைவிடாத மழை மூன்று மாதங்களுக்கும் மேல் தொடர்ந்த தால் கிராமங்கள் அனைத்தும் தீவுகளாக காட்சியளித்தன.

மழை வெள்ளத்திற்கு ஆயிரத்து 700 பேர் பலியான நிலையில், சுமார் மூன்று கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏரத்தாள 8 லட்சம் கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டது

2022ல் பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலி கொடுத்திருந்தது, ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாக்திக்கா மற்றும் கோஸ்ட் என்ற நகரத்தின் அருகே ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்துகுஷ் மலைத் தொடரை கொண்ட ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற நிலநடுக்கம் வழக்கம் என்றாலும் இம்முறை 1,036 பேர் பலிகொண்டது.

அக்டோபர் மாதம் கொட்டித்தீர்த்த கனமழைக்கு 600க்கும் மேற்பட்ட மக்களை பலி கொடுத்தது, நைஜீரியா. மொத்தமுள்ள 36 மாகாணங்களில் 33 மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. ஏற்கனவே வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்த நைஜீரியாவில் பலி எண்ணிக்கை 600ஐ தாண்டி பதிவானது.

ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்காவை புரட்டி போட்ட புயல் மழைக்கு 461 உயிரிழந்தனர். ஆறு மாத கால மழை இரண்டே நாளில் கொட்டி தீர்த்ததால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த பெருமழை ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்கா வையும் முடக்கி போட்டது

தீவு தேசமான இந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு 334 உயிர்கள் பலியாகினர். ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்தோனேஷியாவில் நிலநடுக்கமும், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் மாகாணத்தில் 5 புள்ளி 6 ரிக்டராக பதிவான நிலநடுக்கத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங் கள் தரைமட்டமாகின.


Next Story

மேலும் செய்திகள்