முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி
மக்களின் வாழ்க்கை தரம், மகிழ்ச்சியை அளவீடாக கொண்ட வளர்ச்சியில், மேல்நோக்கிய பாய்ச்சலில் ஆளும் அரசு செல்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 2-வது கூட்டம், நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருநாவுக்கரசர், திருமாவளவன்,
பி.ஆர்.நடராஜன், நவாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நல்வாழ்வு திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், கிராம மேம்பாட்டு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்கள் அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.