சத்தம் போட்டு பேசிய தாய்,மகனுக்கு அரிவாள் வெட்டு - பக்கத்து வீட்டுக்காரர் நிகழ்த்திய பயங்கரம்

x

சத்தம் போட்டு பேசியதற்காக தாய் மற்றும் மகன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே காடுபட்டி பகுதியில் உமா என்பவரும், அவரது மகனான செல்லப்பாண்டி என்பவரும் தங்களது வீட்டின் முன் சத்தமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரான செந்தில்குமார் தாயையும், மகனையும் அரிவாளால் தாக்கியுள்ளார். இதனையடுத்து தாயும், மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செந்தில்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்