கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற பின்னாடியே குதித்த தாய்.. அடுத்து நடந்த விபரீதம்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

வேலூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்பவர், தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை அழைத்துக் கொண்டு, இயற்கை உபாதை கழிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக, அருகே உள்ள கிணற்றுக்குள் குழந்தை விழுந்தது. உடனடியாக, குழந்தையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த கலா, பாதியிலேயே சிக்கிக் கொண்டு கூச்சலிட்டதாக தெரிகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், கலாவை மீட்டனர். பின்னர், தண்ணீரில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தையை சடலமாக மீட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்