வீட்டு வேலை செய்யாமல் மொரட்டு தூக்கம் தூங்கிய மருமகளை சுட்டு கொன்ற மாமியார்!

x

வீட்டு வேலைகள் முழுவதையும் தனது மகனை செய்ய சொல்லிவிட்டு தூங்கிக்கொண்டிருந்த மருமகளை, மாமியார் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தை அதிர செய்துள்ளது.

வீட்டுவேலைகள் செய்வதற்கும், குழந்தைகளை கவனித்து கொள்வதற்குமான ஒரு இயந்திரமாகவே பெண்கள் பார்க்கப்பட்டு வந்த காலம் சிறுது மாறி, தற்போது திருமணம் செய்து கொள்ளும் இளம் காதல் தம்பதிகளிடத்தில் வீட்டு வேலைகளை இருவர் சேர்ந்தும், பகிர்ந்தும் செய்வதை அதிகம் காண முடியும்...

இவ்வாறு காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி, தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், வீட்டு வேலைகளை பெரும்பாலும் மகன் செய்துவருவதையும், எந்நேரமும் மருமகள் தூங்கி கொண்டிருப்பதையும் பார்த்த மாமியார்... மருமகளை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார்...

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் கஜ்ரெளலாவை சேர்ந்தவர் அமித் குமார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியான கோமல் என்பவரை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்...

மாமனார், மாமியார் என கணவரின் குடும்பத்தாருடன் கூட்டு குடும்பமாக கோமல் வாழ்ந்து வந்த நிலையில் , தனது மகனை அவரின் குடும்ப உறவுகளின் பக்கம் மருமகள் இழுத்து செல்வதாக எண்ணி மாமியாரான ராதிகா தேவி ஆத்திரம் கொண்டிருக்கிறார்...

இதனால், கோமலை வீட்டு வேலைகளை செய்ய சொல்லி கொடுமை படுத்தியும், அடிக்கடி வரதட்சணை கேட்டும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது....

ஒரு கட்டத்தில் இதையெல்லாம் தாங்க முடியாமல், அமித்குமாரை அழைத்துக்கொண்டு கோமல் தனிக்குடித்தனம் மாறியது ராதிகாவின் ஆத்திரத்தை மேலும் கூட்டியிருக்கிறது....

கஜ்ரௌலாவின் கங்காநகரில் உள்ள மொஹல்லாவில் கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வந்த கோமலை ராதிகா மறைமுகமாக நோட்டமிட்டு வந்திருக்கிறார்...

அப்போது, அமித்குமாரை கடிவாளம் போட்டு கோமல் இயக்கி வருவதாகவும், வீட்டு வேலைகள் முழுவதையும் அவரையே செய்ய சொல்வதாகவும், எந்நேரமும் அவர்களது வீட்டிற்கு கோமலின் உறவினர்கள் வந்து செல்வதாகவும் அக்கம்பக்கத்தினர் மூலம் ராதிகா தேவிக்கு தகவல் சென்றிருக்கிறது...

இதனால், கொதித்துப்போன ராதிகா தனது மகனை தன்னிடம் இருந்து கோமல் பிரித்து விடுவாள் என எண்ணிய அவர், தனது மகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து, தன்வழிக்கு கொண்டு வர நினைத்த நிலையில், இதற்காக கோமலை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார்...

இந்நிலையில், சம்பவத்தன்று தனது மகனும், மருமகளும் வசித்து வந்த வீட்டிற்கு ராதிகா சென்றபோது, அவரது மகன் அமித் குமார் வீட்டு வேலை செய்து கொண்டிருந்ததும், மருமகள் கோமல் தூங்கி கொண்டிருந்ததும் அவரை கொதித்து போக செய்தது...

உடனே, கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அவர், தூங்கி கொண்டிருந்த கோமலை சுட்டு கொன்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இதையறிந்து அதிர்ச்சியடைந்த கோமலின் தாய் போலீசில் புகாரளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணைக்கு நடத்திய பின்பு... வரதட்சணை கொடுமை பெயரில் கோமலின் கணவர் அமித்குமார், மாமியார் ராதிகா மற்றும் மாமான நரேந்திர சிங் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது....


Next Story

மேலும் செய்திகள்